"தவெக -வில் பதவி..." - விஜய் நடத்தும் விநோத போட்டி

x

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணி விரைவில் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த உறுப்பினர் சேர்க்கை பணிகள் முடிந்த பிறகே பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்புகளில் இருந்தாலும் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நபர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் எண்ணை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் யார் அதிக உறுப்பினர்களை சேர்கிறார்களோ அதன் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்