"மத்திய அரசு நிவாரணம் தரவில்லை""அரசு கஜானாவில் இருந்து தந்தோம்" - அமைச்சர்கள் சொன்ன தகவல்

x

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், வெள்ள பாதிப்பின் போது அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அதிகப்படியான மழை பெய்த போதிலும் மூன்று நாட்களுக்குள் முழுவதுமாக சீர் செய்யப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரப்பட்டதாக விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என வாக்குறுதி அளித்ததும், சமீபத்தில் பெய்த மழையால் பெரும் வெள்ளத்தில் சென்னை மிதந்ததும் தி.மு.க. ஆட்சியில் தான் எனவும் குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சராசரியாக மழை பெய்தால் சென்னையில் நிச்சயமாக தண்ணீர் நிற்காது அதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கை சீற்றத்தால் தான் தண்ணீர் தேங்கியதாகவும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செம்பரம்பாக்கத்தில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதால் ஏற்பட்ட காயம் 100 ஆண்டுகள் ஆனாலும் மறையாது என தெரிவித்தார். மத்திய அரசு தங்களுக்கு நிவாரணத்தை தராவிட்டாலும், தங்கள் கஜானாவில் இருந்து எடுத்து மக்களுக்கு நிவாரணத்தை கொடுத்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்