"10 ஆண்டு கால பாஜக ஆட்சி ட்ரையல் தான்" - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேச்சு | Chennai | H Raja

x

பத்து ஆண்டு கால பாஜக ஆட்சியின் நடந்தது வெறும் ட்ரையல் தான் என்றும் இனிமேல் தான் உண்மையான முன்னேற்றம் மேம்படும் என மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

1980 ஏப்ரல் 6ஆம் தேதி உருவாக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மற்றும் ஹெச்.ராஜா, கரு.நாகராஜன் கட்சிக் கொடியேற்றினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா,

பத்தாண்டுகளாக பாஜக ஆட்சியில் நடந்தது வெறும் ட்ரையல் தான் என்றும் இனி ஆல் ரியல் தான் எனவும் கூறினார். இனிமேல், அனைவருக்கும் உண்மையான முன்னேற்றம் மேம்படும் என எச்.ராஜா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்