கனடாவில் நடந்த புதிய சம்பவம்... டென்ஷன் ஆன இந்தியா - மீண்டும் விழும் விரிசல்..?

x

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்நாட்டு துணை தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. சீக்கியர்களின் கல்சா தின நிகழ்ச்சியில், சிலர் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக, கனடா துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்த வெளியுறவு அமைச்சகம், விரும்பத் தகாத செயல்களுக்கு இந்தியா தனது கவலைகளையும் ஆழ்ந்த எதிர்ப்பையும் தெரிவிப்பதாக பதிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்