"எல்லை மீறும் பாஜக.. குறிவைக்கும் மத்திய ஏஜென்சிகள் " - கோபத்தில் விளாசிய ராஜஸ்தான் முதல்வர்

x

அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய ஏஜென்சிகளை வைத்துக்கொண்டு, காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கரில் தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்பு பாஜக சோதனைகளை நடத்தியதாக குற்றம் சாட்டினார். தனது மகன் வைபவ் கேலாட்டுக்கு அமலாக்க‌த்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பாஜக அனைத்து எல்லைகளையும் மீறி செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார். எதிர்கட்சிகளை துன்புறுத்தி, தேர்தல் திட்டங்களை முடக்க நினைப்பதாகவும், ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியது என்றும் அசோக் கேலாட் கூறினார். மல்லையா, நீரவ் மோடி போன்று கடந்த 8 ஆண்டுகளாக யாரும் பொருளாதார குற்றங்களை செய்யவில்லையா என்றும், மத்திய ஏஜென்சிகள் அவர்களிடம் செல்லாமல் ஏன் அரசியல்வாதிகளை மட்டும் குறிவைக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்