மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடையா? - என்ன சொல்லப் போகிறது ஐகோர்ட் கிளை?

x

மதுரையில் 20-ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க உத்தரவிட கோரிய மனு , உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுகுறித்து, காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மதுரையில் மாநாடு நடக்கவுள்ள இடம், விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது என்றும், மாநாட்டுக்கு சுமார் 15 லட்சம் பேர் வருவதாக கூறப்படும் நிலையில், அன்றைய தினம் விமானங்கள் தரையிறங்குவதில் இடையூறு ஏற்படக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசுகள் வெடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மாநாட்டிற்கு அனுமதி கோரும் முன், மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை என்பதால், வரும் 20ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு தடை விதிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்