"ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அரசியல் நிகழ்வாகிவிட்டது"-ராகுல் காந்தி ஆவேசம்

x

நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில் யாத்திரைக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, சமூகம், பொருளாதாரம், அரசியலில் நீதி பெறுவதே

தமது யாத்திரையின் நோக்கம் என குறிப்பிட்டார். மணிப்பூருக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப் பட்டுள்ளதாகவும், பல மாதங்களுக்கு வன்முறை நீடித்த நிலையிலும், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ நேரில் செல்லவில்லை எனவும் குற்றம் சாட்டினார். ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு முழுக்க முழுக்க அரசியல் நிகழ்ச்சி ஆக்கப்பட்டு விட்டதால், அந்நிகழ்விற்கு செல்ல மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் கூறிவிட்டதாக, தான் கருதுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ஹிந்து சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள்கூட இது ஒரு அரசியல் நிகழ்ச்சி என வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளதாகவும், பிரதமரை சுற்றியும், ஆர்.எஸ்.எஸ்-ஐ சுற்றியும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்விற்கு, தாங்கள் செல்வது கடினம் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்