"எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என உரிய நேரத்தில் அறிவிகப்படும்" ஜெயக்குமார் சொன்ன முக்கிய தகவல்

x

திமுக, பாஜக தவிர்த்து யாரும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது என்றும், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளரை அவர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஓபிஎஸ் அதிமுக தொண்டரே கிடையாது என்றும், அவருக்கும் கட்சிக்கும் சம்மதமே இல்லை என்றார். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஒன்று சேர்ந்தாலும் எதுவும் செய்யமுடியாது எனவும் கூறினார். விரைவில் அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று ஜெயக்குமார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்