டி.கே.சிவக்குமாரை சந்தித்த துணை ஆட்சியருக்கு கொரோனா - பாத யாத்திரையில் பங்கேற்பதில் தடை ஏற்படுமா?

கூட்டமாக சேர்ந்து பாதயாத்திரையில் ஈடுபடுவதால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமாரை அறிவுறுத்திய துணை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
x
கூட்டமாக சேர்ந்து பாதயாத்திரையில் ஈடுபடுவதால்  கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்  என கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமாரை அறிவுறுத்திய துணை மாவட்ட ஆட்சியருக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேகதாது அணை திட்டத்தை வலியுறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் பத்துநாள் பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்  முதல் நாள் யாத்திரை முடிந்தவுடன் முகாமில் இருந்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை சந்தித்த ராம்நகர் மாவட்ட துணை ஆட்சியர் ஜவரே கவுடா, நீங்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதைக்கேட்டு ஆவேசமடைந்த டி.கே. சிவகுமார் தான்  ஆரோக்கியமாக இருப்பதாக  பதில் அளித்து இருந்தார். இந்த சூழலில் ஜவரே கவுடாவுக்கு லேசான காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து அவருக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  டி.கே.சிவகுமாரை அவர் சந்தித்துப் பேசி இருப்பதால் அவர் யாத்திரையை கைவிட்டு தனிமைப்படுத்தி கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை டி கே சிவகுமார்  பாதயாத்திரையை தொடர்ந்தால், அது கொரோனா விதிமுறைகளை மீறியதாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்