விஜயதசமி நாளில் கோயில் திறப்பா? - முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

விஜயதசமி நாளில் கோயில் திறப்பு குறித்து சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
x
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனிடையே, ஆயுத பூஜை உள்ளிட்ட விழாக்களை முன்னிட்டு, மக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்க்க வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, விஜயதசமி நாளில், கோயில்களை திறக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியது. இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமை செயலர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 



Next Story

மேலும் செய்திகள்