"எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு" - சோனியாவை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டி

எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு - சோனியாவை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டி
x


எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

டெல்லியில், காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்த பேசினார். இந்த சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, 
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை சோனியா காந்தி விரும்புவதகாவும், மாநில கட்சிகளை காங்கிரஸ் நம்புவதாகவும், மாநில கட்சிகளும் காங்கிரசை நம்புவதாக கூறினார். பா.ஜ.க. வலிமையான கட்சியாக உள்ளது என கூறிய, மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம் என்றார். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என்றும் அவர் தெரிவித்தார். 
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தம்மை, தேநீர் விருந்துக்கு அழைத்ததாகவும், அவருடன் ராகுல் காந்தியுடன் இருந்ததால் நடப்பு அரசியல் குறித்து விவாதித்தோம் என மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்