பெகாசஸ் விவகாரம் - ராகுல்காந்தி கேள்வி

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா இல்லையா என, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பெகாசஸ் விவகாரம் - ராகுல்காந்தி கேள்வி
x
பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா இல்லையா என, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். 

பெகசாஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில், எதிர்கட்சி தலைவர் மல்லிகார்​ஜூன கார்கே தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மத்திய பாஜக அரசு ஒவ்வொருவரின் செல்போனிலும் பெகாசஸ் என்ற மென்பொருளை பொருத்தி இருப்பதாக குற்றம் சாட்டினார்.  
இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கி இருக்கிறதா? அப்படி வாங்கி இருந்தால் அவற்றை சொந்த மக்களுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளதா எனும் கேள்விக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும் என வலியுறுத்தினார். 
இந்திய ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக  பெகாசஸ் ஆயுதம் ஏன் பயன்படுத்தப்பட்டது என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்திட வேண்டும் என ராகுல்காந்தி கூறினார்.  
தங்களை பொறுத்தவரை பெகாசஸ் விவகாரம் நாட்டுப்பற்று தொடர்பான விஷயம் என்றும், இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராக இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி இது தேச விரோத செயல் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்