நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் ஸ்டாலின்

சட்டமன்ற திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலின், நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
x
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 8 பேர் உட்பட 133 பேர் கலந்து கொண்டனர். இதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிய, முதன்மை செயலாளர் கே.என்.நேரு  வழிமொழிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களுடன் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் நேரில் சந்திக்க உள்ளார். அப்போது அவர், ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். வரும் ஏழாம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்