சாலைக்கு பெரியார் பெயர் மாற்றம்: "கிளர்ச்சி வெடிப்பது உறுதி" - கி.வீரமணி

சென்னையில் பெரியார் பெயரில் இருந்த சாலைக்கு திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாலைக்கு பெரியார் பெயர் மாற்றம்: கிளர்ச்சி வெடிப்பது உறுதி - கி.வீரமணி
x
சென்னையில் பெரியார் பெயரில் இருந்த சாலைக்கு திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் சாலையில் ஈவேரா சாலை என்ற பெயருக்கு பதிலாக கிராண்ட் வெஸ்டன் டிரங்க் சாலை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறை இணையதளத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு 1989-ஆம் ஆண்டு பூந்தமல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை பெரியார் ஈவேரா நெடுஞ்சாலை என மாற்றியதை சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது பெயர் மாற்றம் செய்தது யாரை திருப்தி செய்ய எனக் கேள்வி எழுப்பியுள்ள கி வீரமணி இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஈவேரா நெடுஞ்சாலை என்று மீண்டும் பெயர் மாற்றாவிட்டால் கடும் கிளர்ச்சி வெடிப்பது உறுதி என்றும் கி வீரமணி எச்சரித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்