ராஜினாமா செய்த எம்.எல்.ஏ தற்காலிக நீக்கம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

பதவியை ராஜினாமா செய்த, புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
x
பதவியை ராஜினாமா செய்த, புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வெங்கடேசன், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் எனவும் துரைமுருகன் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்