"வளரும் தலைவர்" யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?

உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஒருவர் மட்டும் தேர்வாகியுள்ளார். அவர் யார்... இந்த அங்கீகாரம் கிடைத்தது எப்படி? பார்க்கலாம்...
வளரும் தலைவர் யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?
x
அதில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு இந்தியர் சந்திரசேகர் ஆசாத். இவர் உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள காட்கவுலி கிராமத்தில் 1986 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயதிலேயே அம்பேத்காரால் ஈர்க்கப்பட்டு சட்டம் படித்த இவர், பள்ளியில் படிக்கும் போதே பாகுபாடுகளை விமர்சித்து பேசிவந்தார். பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக செயல்படும் சந்திரசேகர் ஆசாத் , இலவசமாக பள்ளிகளையும் தொடங்கி அவர்களுக்கு கல்வியையும் வழங்கி வருகிறார். சந்திரசேகர் ஆசாத் கடந்த 2014 ஆம் ஆண்டு பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பணியாற்ற பீம் ஆர்மி என்ற அமைப்பை தொடங்கினார். அவர்களுக்காக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகிறார். 2017-ஆம் ஆண்டில் சஹாரன்பூரில் வன்முறையை தூண்டியதாக கைது செய்யப்பட்டார், சந்திரசேகர் ஆசாத். அவருக்கு எதிராக உத்தரபிரதேச அரசு தேசப் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியது. 2018 ஆம் ஆண்டு  சிறையிலிருந்து வெளிவந்தார். அவருக்கு எதிரான வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. பின்னர் 2019 டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்  தலைமையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் பெரும் கவனம் பெற்றது. இவரை தவிர்த்து இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனாக், டுவிட்டர் நிறுவன வழக்கறிஞர் விஜயா கடே,  இன்ஸ்டாகார்ட் நிறுவனத்தின் சிஇஒ அபூர்வா மேத்தா, கெட் அஸ் பிபிஇ நிறுவன இயக்குனர் ஷிகா குப்தா மற்றும்  அமெரிக்காவின் அப்சால்வ் நிறுவனத்தின் நிறுவனர் ரோகன் பவுலுரி என 5 இந்திய வம்சாவளியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்