பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் - அதன் முக்கிய அம்சங்கள் என்ன?

பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேறி உள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்
பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் - அதன் முக்கிய அம்சங்கள் என்ன?
x
பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேறி உள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்

நாட்டில் உள்ள சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், மும்பை, நியூ மங்களூர், கொச்சின், கொல்கத்தா துறைமுகம் உள்ளிட்ட 11 பிரதான துறைமுகங்களுக்கு அதிக உரிமைகள் கிடைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

இதற்காக பிரதான துறைமுகங்கள் அமைப்பு சட்டம் 1963-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 

பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா கடந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

துறைமுகங்கள் துறையில் ஏற்பட்டு வரும் துரிதமான வர்த்தக மற்றும் தனியார் துறையின் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக துறைமுகங்கள் துறையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் துறைமுக ஆணையங்களின் நிர்வாக அதிகாரம் மத்திய அரசின் கையில் இருப்பது விரைந்து முடிவுகளை எடுப்பதில் தடைகளை ஏற்படுத்துகிறது. 

எனவே போட்டிகளை சமாளிக்கவும், விரைந்து முடிவெடுக்கவும் துறைமுகங்கள் ஆணையமே சுயமாக முடிவுகளை எடுக்க, அதிகாரம் வழங்கும் வகையில், இந்த சட்டத் திருத்த மசோதா மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய துறைமுகங்களில் உள்ள ஆளுகை நடைமுறையை மாற்றி அமைப்பது இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம். 

பெரிய துறைமுகங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும் இந்த மசோதா உதவுகிறது. 

இந்த மசோதா மூலம் ஒப்பந்தங்கள் போடுவது, திட்டமிடல் மற்றும் மேம்பாடு, தேசிய நலன், பாதுகாப்பு, கட்டணங்களை நிர்ணயிப்பது ஆகியவை தொடர்பான முழு அதிகாரமும் துறைமுக ஆணைய வாரியத்துக்கு வழங்கப்பட உள்ளது

இந்த மசோதாவில் சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 134-ல் இருந்து 65ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விரைவாக முடிவு எடுக்க ஏதுவாக துறைமுக ஆணையத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 லிருந்து 14 ஆகவும், 17 இல் இருந்து 11 ஆக குறைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

மேலும் இந்த வாரியம் துறைமுகங்களுக்கும், சலுகைதாரர்களுக்கும் இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைப்பது, புகார்களை கவனிப்பது ஆகிய பணிகளையும் மேற்கொள்ளும்

துறைமுகம் தொடர்பான பயன்பாட்டுக்கு நிலத்தை 40 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்