100 நாள் செயல் திட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
x
திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதே திமுகவின் முதல் பணி என்று தெரிவித்தார். இதற்காக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற திருவண்ணாமலையில் வரும் 29ஆம் தேதி  புதிய பிரசார பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரசார பயணம் மூலம் 30 நாளில் தமிழகம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளதாக தெரிவித்தார். மக்கள் தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க ஒப்புகை சீட்டுடன் கூடிய படிவம் ஒன்று வழங்கப்படும் என கூறியுள்ள ஸ்டாலின், கூட்டங்களில் பங்கு பெற இயலாதவர்கள், "ஸ்டாலின் அணி" என்ற செயலி மூலம் பிரச்சனைகளை கூறலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் இந்த பிரச்சனைகளை தீர்க்க தனி துறை ஒன்று உருவாக்கப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்