தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட தமிழக முதல்வர் பழனிசாமி,நாளை பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்திக்கிறார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
x
சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட தமிழக முதல்வர் பழனிசாமி,நாளை பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்திக்கிறார். அப்போது, வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரெயில்,   காவிரி குண்டாறு இணைப்பு, கல்லணை, பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம், உள்ளிட்ட திட்டங்களை, துவக்கி வைக்க அழைப்பு விடுக்க உள்ளார்.இந்நிலையில் இன்று மாலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்.தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்திக்க உள்ள முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்திற்கு, கூடுதல் நிதி கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.விரைவில் சட்டப்பேரவை தேர்தல், நடைபெற உள்ள நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திப்பதால் அரசியல் ரீதியாக பல்வேறு வி‌ஷயங்கள் பற்றி பேசலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் டெல்லி பயணம் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக, கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்