"அனைத்தையும் இழந்த விவசாயிகள்: உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அனைத்தையும் இழந்த விவசாயிகள்: உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
பல நாட்களாக பட்டினியில் வாடிய ஒருவருக்கு கிடைத்த உணவை வாய்க்கு கொண்டு செல்லும் போது, அந்த உணவு தட்டிப் பறிக்கப்பட்டால், அவர் எந்த மனநிலையில் இருப்பாரோ, அதே மனநிலையில் தான் தமிழ்நாட்டு உழவர்கள் இன்று இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, இதுவரை இல்லாத அளவில் 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போதைய மழையால் பெரும்பாலானவை சேதமடைந்து விட்டதாகவும் அவர்  கூறி உள்ளார். இனி மீட்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில், உரிய இழப்பீடு வழங்குவதோடு, அனைத்து வித பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்