"இந்தியா - சீனா இடையே இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வ தீர்வும் எட்டப்படவில்லை" - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியா சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்சனைக்கு இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வமான தீர்வும் எட்டப்படவில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா இடையே இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வ தீர்வும் எட்டப்படவில்லை - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
இரு தரப்புக்கும் இடையே ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண்பதே அரசின் எண்ணம் எனவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அனைத்து நாடுகளுடனும் அமைதியான நல்லுறவையையே இந்தியா விரும்புவதாகவும், அதேசமயம், இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிக்கும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்கும் வலிமையும், திறமையும் தம்மிடம் இருப்பதாக கூறியுள்ளார். 

நரேந்திர மோடி பிரதமரானதில் இருந்து, தேசப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங்...எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, எல்லையில் மட்டுமின்றி, எல்லையைத் தாண்டிச் சென்று, தீவிரவாதிகளை வீழ்த்தும் வலிமை இந்தியாவிடம் இருக்கிறது என்றும் கூறினார். 

எல்லைப் பகுதியில் சீனா புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவது போலவே, இந்தியாவும் ஏற்படுத்தி வருவதாகவும், அவையெல்லாம் எந்த நாட்டையும் தாக்குவதற்காக அல்ல... மாறாக நம் மக்களுக்காக என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் எதனோடும், சமரசம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்