தெலுங்கானா இடைத்தேர்தல் முடிவுகள் - ஆளுங்கட்சியை வீழ்த்தி வென்ற பாஜக

தெலுங்கானாவின், துபாக்கா சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான டி.ஆர்.எஸ் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானா இடைத்தேர்தல் முடிவுகள் - ஆளுங்கட்சியை வீழ்த்தி வென்ற பாஜக
x
இந்த தொகுதி, இதற்கு முன்னர், ஆளும் டிஆர்எஸ் கட்சியின் வசமிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான தகவலின்படி, ஆயிரத்து 118 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா வென்றுள்ளது. இந்த தொகுதியில், பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவ் 62 ஆயிரத்து 772 வாக்குகளும், ஆளும் டிஆர்எஸ் கட்சி 61 ஆயிரத்து 302 வாக்குகளும், காங்கிரஸ் கட்சி 21 ஆயிரத்து 819 வாக்குகளும் பெற்றுள்ளன. ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கான தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான, சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்