"நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டதால் நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டதால் நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். டெல்லியில் காணொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், நோய், எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும், பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கைக்கூப்பி கேட்டு கொள்வதாகவும் கூறினார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான பணிகள், தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பல்வேறு தடுப்பு மருந்துகள் பல்வேறு நிலைகளில் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டு மக்களிடம் பேசிய அவர், தடுப்பு மருந்துகள் தயாரானால், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்று கூறினார்.
Next Story