வரிச் சலுகை மற்றும் தளர்வுகள் சட்டத் திருத்த மசோதா - மக்களவையில் அறிமுகம் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் மன்னிப்பு கேட்கக்கோரி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மக்களவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
வரிச் சலுகை மற்றும் தளர்வுகள் சட்டத் திருத்த மசோதா - மக்களவையில் அறிமுகம் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
மக்களவையில் இன்று வரிச் சலுகை மற்றும் தளர்வுகள் சட்டத் திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம்
செய்தார். அதன்மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மனீஷ் திவாரி, பிரதமர் சிறப்பு நிதியை, பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராயும் வலியுறுத்தினார். ஜிஎஸ்டி வரிவசூலில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு உரிய பங்களிப்பை தரவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. அதனை மறுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்களுக்கு பொறுப்புள்ளது என்றும்  அதனை உதறித்தள்ளமாட்டோம் என்றும் உறுதியளித்தார். வெற்றிகரமான முதலமைச்சராக பணியாற்றிய பிரதமர் மாநிலங்களின் தேவையை  நன்கு அறிவார் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். தொடர்ந்து பேசிய நிதித்துறை இணையமைச்சர் அனுராக்தாக்குர், சோனியாகாந்தி குடும்பத்தினர், பல்வேறு பெயர்களில் அறக்கட்டளை நிதியை எடுத்துச்சென்றுவிட்டதாக குறைகூறினார். இதற்கு, காங்கிரஸ் உறுபினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அனுராக் தாக்குர் மன்னிப்பு கேட்கக்கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளி - மக்களவை அரை மணி நேரம் ஒத்திவைப்பு

இதைத்தொடர்ந்து, அனுராக் தாக்குர் மன்னிப்பு கேட்கக்கோரி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மக்களவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்