மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்காமல் துரோகம் - சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்காதது மாநிலங்களுக்கு செய்யும் துரோகம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்காமல் துரோகம் - சோனியா காந்தி குற்றச்சாட்டு
x
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் ஆளும்  7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது பேசிய சோனியா காந்தி 
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 

ஆனால் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை முழுமையாக வழங்கப்படாததால் மாநிலங்களின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்  கூறினார்.  மத்திய அரசின்  தேசிய கல்வி கொள்கை கவலையடைய செய்வதாகவும், மாணவர்கள் மீது அக்கறையின்றி நீட், ஜே. ஈ.ஈ. தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் சோனியாகாந்தி குற்றம்சாட்டினார். 

மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்காமலேயே அவசர  சட்டங்கள் பிறப்பிக்கப்படுவதாகவும், பொதுத்துறை சொத்துகள் விற்கப்படுவதாகவும் 
சோனியா காந்தி புகார் தெரிவித்தார். பல விமான நிலையங்கள் தனியார் வசம் சென்ற நிலையில் மத்திய அரசு , ரயில்வே துறையும் தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக சோனியா காந்தி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்