மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா - வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில், சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். அதில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வீட்டிலிருந்தபடியே காணொலி காட்சி மூலம் நடவடிக்கைகள் எடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னை தொடர்பு கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் டுவிட்டரில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் மாநில முதல்வர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு முதன்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

------------------------------------------------

Next Story

மேலும் செய்திகள்