பிரதமர் மோடி தெரிவித்த கருத்து தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப சிலர் முயற்சி
பதிவு : ஜூன் 20, 2020, 04:53 PM
சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஒருதலைப்பட்சமான எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சீனா விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்து தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன படைகள் உட்புக முயன்றால் இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும் என்பதை அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெளிவாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு இல்லை என பிரதமர் மோடி தெரிவித்தது,  நமது பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலின் விளைவாக ஏற்பட்டது என்றும்,

நமது கட்டமைப்புகளை அழித்து, தனது கட்டமைப்புகளை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நமது எல்லையை பாதுகாக்க வீரர்கள் தங்களுடைய இன்னுரை தியாகம் செய்துள்ள சூழ்நிலையில் அவற்றை இழிவுபடுத்தும் வகையில் சில தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது எனவும் பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50 views

பிற செய்திகள்

சீனாவை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன் ? - ப .சிதம்பரம் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

37 views

"ரயில்வே தனியார் வசம் போனால் அதிக கட்டணம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

12 views

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 31 வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

47 views

"சீனாவில் இருந்து மின்சார உதிரிபாகங்கள் இறக்குமதி இல்லை" - மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் திட்டவட்டம்

சீனாவில் இருந்து மின்துறை உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

40 views

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

883 views

ஊரடங்கில் அதிக வளர்ச்சி டாப்100 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ்

கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் தேக்கமடைந்துள்ள நிலையில், அதிக வளர்ச்சி கண்ட 100 நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.