"இந்திய ரயில்வே அரசிடம் மட்டுமே இருக்கும்" - ரயில்வே அமைச்சர் மக்களவையில் எழுத்துபூர்வ தகவல்

ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் தங்களின் பரிசீலனையில் இல்லை என நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே அரசிடம் மட்டுமே இருக்கும் - ரயில்வே அமைச்சர் மக்களவையில் எழுத்துபூர்வ தகவல்
x
ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் தங்களின் பரிசீலனையில் இல்லை என நாடாளுமன்றத்தில்  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தவறானது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். அதுபோன்ற திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என கூறியுள்ள அவர் இந்திய ரயில்வே கட்டமைப்புக்கு சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவை என்றும் ரயில்வே கட்டமைப்பை வேகப்படுத்தி, பயணிகள் மற்றும் சரக்கு சேவை வசதியை விரைந்து வழங்க பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்