குடியரசுத் தலைவருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக சார்பாக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்து படிவங்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அனுப்பப்பட்ட நிலையில், திமுக கூட்டணி தலைவர்கள் அவரை நேரில் சந்தித்தனர்.
குடியரசுத் தலைவருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு, கடந்த வாரம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்