பல்கலை.க்குள் நுழைந்த பா.ஜ.க.வினரால் பரபரப்பு

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்கலை.க்குள் நுழைந்த பா.ஜ.க.வினரால் பரபரப்பு
x
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை சட்டதிருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தலைமையில்,100க்கும் மேற்பட்ட கட்சியினர் பல்கலைக்கழக நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மூடப்பட்டிருந்த நுழைவாயிலை திறந்து திடீரென நுழைய முயன்றனர் இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க. வினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்