அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையமா? - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்

அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பரிந்துரை வந்துள்ளதாக மக்களவையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹார்தீப் சிங் பூரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையமா? - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்
x
அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பரிந்துரை வந்துள்ளதாக மக்களவையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹார்தீப் சிங் பூரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.  இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அங்கு ஏற்கனவே இருக்கும் விமான ஓடுபாதையை மாநில கட்டுமான திட்டத்தின் கீழ் மேம்படுத்தி கொள்வதாக அம்மாநில அரசு தெரிவித்து இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஹார்தீப் சிங் பூரி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்