"புகைப்படம், பட்டாசு, பட்டம் தவிர்ப்பீர்" - கட்சியினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

தாம் சம்மந்தப்படாத விழாக்களில் தமது புகைப்படத்தையும், பங்கு பெறும் விழாக்களில் பட்டாசுகளையும், பட்டத்தையும் தவிர்க்குமாறு, கட்சியினரை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
புகைப்படம், பட்டாசு, பட்டம் தவிர்ப்பீர் - கட்சியினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
x
தாம் சம்மந்தப்படாத விழாக்களில் தமது புகைப்படத்தையும், பங்கு பெறும் விழாக்களில் பட்டாசுகளையும், பட்டத்தையும் தவிர்க்குமாறு, கட்சியினரை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் சம்பந்தப்படாத, கலந்து கொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்பு, சுவரொட்டி, அழைப்பிதழ்களில், தமது புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார்.  மேலும், தனக்கு, ''மூன்றாம் கலைஞர், திராவிட தளபதி'' போன்ற பட்டப் பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறும், திமுகவினருக்கு உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்