"பாஜகவுக்கு ஒரு பலனும் கிடைக்காது" - திருநாவுக்கரசர்

"திருவள்ளுவரை வைத்து சர்ச்சை - வேண்டாத வேலை"
பாஜகவுக்கு ஒரு பலனும் கிடைக்காது - திருநாவுக்கரசர்
x
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவதை, மக்கள் நகைச் சுவையாக எடுத்து கொள்வார்கள் என  திருநாவுக்கரசர் எம்பி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளுவரை சாமி ஆக்குவதன் மூலம் பா.ஜ.க.வுக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை என்றார். காவி அணிவதால், திருவள்ளுவர் பா.ஜ.க.வில் இருந்தார் என்று மக்கள் சொல்ல போகிறார்களா என கேள்வி எழுப்பிய திருநாவுக்கரசர்,  இது, பா.ஜ.க.வுக்கு வேண்டாத வேலை என்றும் வீண் சர்ச்சைகள் மூலம் மக்களிடம் குழப்பம் உண்டாக்கும் வேலை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்