"தமிழை பற்றி பேச தகுதியற்றவர் தமிழிசை" - திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

வடசென்னையில் நான்காவது ஆண்டாக நடைபெறும் புத்தகக் கண்காட்சியை தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பார்வையிட்டார்
தமிழை பற்றி பேச தகுதியற்றவர் தமிழிசை - திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
x
வடசென்னையில் நான்காவது ஆண்டாக நடைபெறும் புத்தகக் கண்காட்சியை தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருவதாக புகார் கூறினார். புத்தகக் கண்காட்சியால், மாணவர்களின் வாசிக்கும் ஆர்வம் தூண்டப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த 50 ஆண்டுகாலமாக, தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார். மேலும், தமிழை பற்றி பேச தமிழிசை தகுதியற்றவர் என்றும், தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்