"யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என அழைக்க வேண்டும்" - மாநிலங்களவையில் மதிமுக எம்.பி. வைகோ பேச்சு

சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்ட திருத்த மசோதா, ஜனநாயகத்திற்கு எதிரானது என, மதிமுக எம்.பி. வைகோ மாநிலங்களவையில், தெரிவித்துள்ளார்.
யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என அழைக்க வேண்டும் - மாநிலங்களவையில் மதிமுக எம்.பி. வைகோ பேச்சு
x
சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்ட திருத்த மசோதா, ஜனநாயகத்திற்கு எதிரானது என, மதிமுக எம்.பி. வைகோ மாநிலங்களவையில், தெரிவித்துள்ளார். இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், தனிநபர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்க வைக்கும் இந்த மசோதாவின் அம்சங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இதன் மூலம் அரசியல் போராளிகளை, பழி வாங்க நேரிடும் என்றும் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். நாடுகளின் கூட்டமைப்பு தான் இந்தியா என்றும், எனவே, இதனை United States of India என்றே அழைக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் பேசிய வைகோ கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்