காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு, டிரம்ப் அறிவுறுத்தல்? - மோடி பதிலளிக்க வலியுறுத்தி அவையில் காங்கிரஸ் அமளி

காஷ்மீர் விவகாரத்தில் சமாதான பேச்சுக்கே இடமில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு, டிரம்ப் அறிவுறுத்தல்? - மோடி பதிலளிக்க வலியுறுத்தி அவையில் காங்கிரஸ் அமளி
x
காஷ்மீர் விவகாரத்தில் சமாதான பேச்சுக்கே இடமில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே, சமாதானம் செய்து கொள்ளுமாறு பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என கூறி, மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், சமாதானம் என்பது சிம்லா ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும், காஷ்மீர் நமது சுயமரியாதை என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்