14 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா எதிரொலி - குமாரசாமி பதவி விலக பா.ஜ.க. வலியுறுத்தல்

கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் எச்.நாகேஷ் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
14 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா எதிரொலி -  குமாரசாமி பதவி விலக பா.ஜ.க. வலியுறுத்தல்
x
கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் எச்.நாகேஷ், தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறும் கடிதத்தையும் மாநில ஆளுநரிடம் வழங்கினார். பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கும் நிலையில், அதற்கு தமது ஆதரவையும் ஆளுநரிடம் பதவி விலகிய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நாகேஷ் தெரிவித்தார். இந்நிலையில், அவரை பா.ஜ.க. வரவேற்பதாக, எடியூரப்பா உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சோபா கரண்டலேஜியே தெரிவித்தார். பெரும்பான்மையை இழந்து விட்ட நிலையில் குமாரசாமி உடனடியாக பதவி விலகுவதோடு, புதிய அரசு அமைய வழிவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசியல் கட்சி சாராத யார் பா.ஜ.க.வுக்கு வந்தாலும் வரவேற்க தயாராக உள்ளதாகவும், அதிருப்தி காங்கிரஸ், மதச்சார்பற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க. எந்தவித தொடர்பும் கொள்ளவில்லை என்றும் சோபா தெரிவித்தார். இதனிடையே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் தனி விமானத்தில் மும்பை சென்றார். இதனிடையே, காங்கிரஸ் அமைச்சர்களுடன் பேச்சு நடத்திய அம்மாநில துணை முதலமைச்சர் பரமேஸ்வர ராவ், ஆளுநரை சந்தித்து, 22 அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அமைச்சர்கள் தங்களது சொந்த விருப்பப்படியே ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்