முத்ரா கடனில் 2,300 மோசடிகள் : தமிழகம் முதலிடம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

மத்திய அரசின் மிக முக்கிய கடன் திட்டமான, முத்ரா கடன் திட்டத்தில் 2 ஆயிரத்து 313 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முத்ரா கடனில் 2,300 மோசடிகள் : தமிழகம் முதலிடம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
x
மத்திய அரசின் மிக முக்கிய கடன் திட்டமான, முத்ரா கடன் திட்டத்தில் 2 ஆயிரத்து 313 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  முத்ரா திட்டத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை 19 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில் 2 ஆயிரத்து 313 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், 344 மோசடி சம்பவங்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், நாடு முழுவதும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள, சுமார் 14 ஆயிரத்து 578 கோடி ரூபாய் உரிமை கோர ஆளில்லாமல் இருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்