"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம் - அமித்ஷா
x
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். இந்திய படைகள், பாகிஸ்தான் படைகளை விரட்டி அடித்துக் கொண்டிருந்த நிலையில், பிரதமர் நேரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தார் என குற்றம்சாட்டினார். அமித்ஷாவின் பேச்சுக்கு, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒரு குறிப்பிட்ட பெயரை சொல்வதால், உங்களுக்கு இவ்வளவு வலிக்கிறது என்றால், நான் வேண்டுமானால் நாட்டின் முதல் பிரதமர் என கூறுகின்றேன் என காங்கிரசை அமித்ஷா சாடினார். மேலும், 370 -வது பிரிவு நிரந்தரம் இல்லை என்றும், ஜம்மு, காஷ்மீரில் தற்போது சட்டம் ஒழுங்கு முன்னேறியுள்ளதாகவும், இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார். ஜம்மு, காஷ்மீரில் 132 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 93 முறை காங்கிரஸ் ஆட்சியில் தான் என்றும் குறிப்பிட்டார். மேலும் அரசியல் காரணங்களுக்காகவே காங்கிரஸ் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்