நாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு : ராஜ்நாத் சிங்

நாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசனைகளை பெற முடிவு : ராஜ்நாத் சிங்
x
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், அங்கீரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பீகார், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதே நேரம், திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ஒ​ரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, குழு அமைத்து, ஆலோசனைகளை பெற திட்டம் என பிரதமர் நரேந்தரமோடி கூறியதாக, குறிப்பிட்டார். இந்த திட்டத்திற்கு பெரும்பாலான கட்சிகள், ஆதரவு அளித்துள்ளதாகவும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக​ள் மாற்றுக் கருத்துக்களை கொண்டுள்ளதாகவும் ராஜ்நாத் ​சிங் கூறினார். இக்கட்சிகள் மாற்று கருத்துக்களை கொண்டிருந்தாலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.

அதிமுக சார்பில் மத்திய அமைச்சரிடம் கடிதம் :



இதனிடையே,பிரதிநிதித்துவம் உள்ள கட்சித்தலைவர்களுக்கு மட்டுமே அனுமதி என கூறப்பட்டதால், அதிமுக சார்பில் சி.விசண்முகம் மற்றும் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே இது தொடர்பான அதிமுகவின் கடிதத்தை சீலிட்ட உறையில், மத்திய அமைச்சரிடம் வழங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்