பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு
பதிவு : ஜூன் 16, 2019, 06:41 PM
நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் 'முத்தலாக்' உள்ளிட்ட பல முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதையொட்டி, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில்  பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத்,  திமுக சார்பில் டிஆர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, சமாஜ்வாடி சார்பாக ராம்கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக தெரிக் ஓ பிரைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும் மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர் கட்சியினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், புதிய எம்பிக்கள் நாளை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க வரும் 19 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  ஜூலை 5 ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.