"அரசு நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன" - மதசார்பற்ற ஜனதா தளம் மீது பாஜக புகார்

மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அரசு நிலங்கள் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதாக கூறி, கர்நாடக பாஜகவினர் பெங்களூரூவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன - மதசார்பற்ற ஜனதா தளம் மீது பாஜக புகார்
x
மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அரசு நிலங்கள் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதாக கூறி, கர்நாடக பாஜகவினர் பெங்களூரூவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி சிலை அருகே, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மாநில அரசு விவசாயிகளுக்கு உரிய முறையில் கடன் தள்ளுபடி செய்யவில்லை என்றும், பயனற்ற அறிவிப்புகளை தான் அரசு சாதனையாக செய்து கொண்டிருப்பதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்