மக்களவை துணை சபாநாயகர் பதவி தருமாறு பா.ஜ.க.வுக்கு சிவசேனா நிர்பந்தம்...

பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி, மக்களவை துணை சபாநாயகர் பதவி உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
மக்களவை துணை சபாநாயகர் பதவி தருமாறு பா.ஜ.க.வுக்கு சிவசேனா நிர்பந்தம்...
x
பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி, மக்களவை துணை சபாநாயகர் பதவி உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 18 இடங்க​ளில் வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி உள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சஞ்சய் ராவத், கூட்டணி கட்சிகளின் வெற்றியை பா.ஜ.க. அங்கீகரிக்க வேண்டும் என்றும், தங்கள் கோரிக்கை இயற்கையான ஒன்று தான் என்றும் தெரிவித்துள்ளார். அதிகாரமிக்க துறைகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சிவசேனா கோரியுள்ளது. கூட்டணியில் மற்றொரு பிரதான கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவையில் பங்கேற்க மறுத்துவிட்ட நிலையில், அக்கட்சியை சேர்ந்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநிலங்களை துணைத் தலைவராக நியமித்ததையும் சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்