அடுத்த மத்திய நிதியமைச்சர் யார்?... போட்டியில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன்

கடந்த முறை மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி இந்த முறை தனக்கு பதவி வேண்டாம் என கூறிவிட்ட நிலையில், அந்த பதவிக்கு அமித்ஷா - நிர்மலா சீதாராமன் இடையே போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த மத்திய நிதியமைச்சர் யார்?... போட்டியில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன்
x
உடல்நலக் குறைவு காரணமாக இந்த முறை பதவி வேண்டாம் என அருண்ஜெட்லி கூறிவிட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர் அமித்ஷா, ஏற்கனவே பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரில் ஒருவருக்கு மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நிர்மலா சீதாராமனைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே மத்திய நிதி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த அனுபவம் கொண்டவர். அதேநேரம் அமித்ஷாவும், குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, உள்துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவமும், பாஜக தேசிய தலைவராக சிறப்பாக செயல்பட்டவரும் ஆவார். எனவே அடுத்த மத்திய  நிதி அமைச்சர் பதவி போட்டியில் இந்த இருவரும் சரிசமமான இடத்தில் இருப்பதால், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

Next Story

மேலும் செய்திகள்