மோடி அமைச்சரவையில் இடம்பெறும் சிவசேனா

பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தலா ஒரு மத்திய அமைச்சர் பதவி தர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி அமைச்சரவையில் இடம்பெறும் சிவசேனா
x
பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தலா ஒரு மத்திய அமைச்சர் பதவி தர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பேட்டியளித்த சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சிவசேனா கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள  ஒரு அமைச்சர் பதவிக்கு, அர்விந்த சவாந்த் பெயரை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அ.தி.மு.க. சார்பில் ஒ.பி.ரவீந்தரநாத் அல்லது வைத்திலிங்கம், ஐக்கிய ஜனத தளம் கட்சி சார்பில் ஆர்.சி.பி.சிங், லோக் ஜனசக்தி சார்பில் ராம்விலாஸ் பாஸ்வான், அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத் பாதல் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்