பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
x
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார். இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30-தேதி  நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று டெல்லி சென்ற ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவரும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதையடுத்து, 30-ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்