ஒய்.எஸ்.ஆர் காங். புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் : சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன்மோகன் தேர்வு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒய்.எஸ்.ஆர் காங். புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் : சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன்மோகன் தேர்வு
x
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி,148 இடங்களில் அபார வெற்றி பெற்றது. அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அமராவதியில் நடைபெற்றது. இதில், ஜெகன்மோகன் ரெட்டி சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சராக வரும் 30 தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவித்தார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க இருப்பதாகவும் அவர் கூறினார். ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் அளிக்ககூடிய நவரத்தினம் ஒன்பது திட்டத்தில் முதல் கையெழுத்திடுவேன் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்