மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார் மோடி : மாலை 5 மணிக்கு பாஜக எம்.பிக்கள் கூட்டம்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் மாலையில் நடைபெறுகிறது.
மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார் மோடி : மாலை 5 மணிக்கு பாஜக எம்.பிக்கள் கூட்டம்
x
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் மாலையில் நடைபெறு கிறது. சுமார் 5 மணி அளவில் துவங்கும் இந்த கூட்டத்தில், நரேந்திரமோடி, மீண்டும் பிரதமர் ஆக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதனைத்தொடர்ந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து, பாஜக எம்பிக்களின் ஆதரவு கடிதத்தை ஒப்படைத்து, ஆட்சி அமைக்க நரேந்திரமோடி, முறைப்படி, உரிமை கோருவார். அநேகமாக, வருகிற 30 ம் தேதி, நரேந்திரமோடி, மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, வருகிற 28 ம் தேதி, வாரணாசி தொகுதியில் நன்றி அறிவிப்பு பேரணியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்