வாக்காளர்களுக்கு நன்றி - தலைமை தேர்தல் ஆணையர்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு நன்றி - தலைமை தேர்தல் ஆணையர்
x
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் சுமூகமாக நடந்ததற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சியினர், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், ஊடகத்தினர் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆங்காங்கே ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர பெரும்பாலான மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் அமைதியாகவும் , நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றதாக சுனில் அரோரா குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்