பாஜக தேர்தல் அறிக்கை- முக்கிய அம்சங்கள்

அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜி.எஸ்.டி நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும் என, பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கை- முக்கிய அம்சங்கள்
x
"கிஷான் சமான்" திட்டத்தில் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை நடைமுறைகளுக்கு அரசியல் சட்ட பாதுகாப்பு கொண்டு வரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மேலும் 200 கேந்திர வித்யாலயா, நவோதயா பள்ளிகள் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து காச நோய் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் மூலதன முதலீடுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 101 விமான நிலையங்கள், 2024ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத குடிபெயர்வுகளை தடுக்க நடவடிக்கை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. சில்லறை வர்த்தகத்திற்கான தேசிய கொள்கை உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வணிகர்களுக்காக தேசிய வர்த்தக நல வாரியம் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜி.எஸ்.டி நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும் என்பது போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்